மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

கிச்சன் கீர்த்தனா: பூண்டு - பருப்புத் துவையல்

கிச்சன் கீர்த்தனா: பூண்டு - பருப்புத் துவையல்

தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் உஷ்ண நிலையில் இருக்கும் நேரங்களிலும் இந்தத் துவையலை சாப்பிட வாய்க்கும், வயிற்றுக்கும் இதமாக இருக்கும். பூண்டு, பெருங்காயம் வாயுத்தொல்லையை நீக்கும். மிளகு ஜீரண சக்தியைத் தூண்டும். துவரம்பருப்பு உடலுக்கு சக்தி தரும்.

என்ன தேவை?

துவரம்பருப்பு - ஒரு கப்

பூண்டு பற்கள் - 8

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

மிளகு - 8

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பை எண்ணெய்விட்டு சிவக்க வறுக்கவும். வறுத்து முடிக்கும் தருவாயில் உப்பு, மிளகு, பெருங்காயத்தூள், பூண்டு பற்களையும் சேர்த்து வறுத்து இறக்கவும். ஆறியதும் திட்டமாக நீர் விட்டு துவையலாக அரைக்கவும். இதை நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, புழுங்கல் கஞ்சி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

நேற்றைய ரெசிப்பி: வல்லாரை துவையல்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வியாழன் 27 மே 2021