fஊரடங்கை மீறியவர்களுக்குத் தடுப்பூசி!

public

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வந்தது. ஒரு நாள் பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்தது. தற்போது தமிழக அரசு, கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியதன் விளைவாக பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆனால், பொது மக்கள் முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பதில்லை. தேவையின்றி வெளியே வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக இ-பதிவு முறை அமலில் இருக்கும் நிலையில், மருத்துவ காரணங்களுக்காகச் செல்கிறேன் என்று போலி ஆவணங்களுடன் பயணிப்பது போலீசாரின் வாகன தணிக்கையில் தெரியவந்தது.

இதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்தப் போகிறேன் என்று காரணத்தை கூறி பலர் அவசியமின்றி வெளியே சுற்றுகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு அம்மாவட்ட போக்குவரத்து போலீசார் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர்.

விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ‘தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தான் வெளியே வந்தேன்’ என்று காரணம் கூறியவர்களுக்கு நிகழ்விடத்திலேயே தடுப்பூசி போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

விழுப்புரம், நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் ஊரடங்கை மீறி வந்தவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதுபோன்று கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *