மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: எள்ளுப்பொடி!

கிச்சன் கீர்த்தனா: எள்ளுப்பொடி!

சிறு தானிய வகைகளில் ஒன்றான எள்ளு, சத்து மிகுந்த ஒரு உணவுப் பொருள். நம் உணவில் பயன்படும் நல்லெண்ணெயின் மூலப் பொருள் இந்த எள்ளுதான். எள்ளுருண்டை, எள்ளு சாதம் எனப் பல வடிவங்களில் எள்ளை உணவாக எடுக்கும் நடைமுறை இருக்கிறது. அந்த வகையில் எள்ளுப் பொடியும் முக்கியமானது. எள்ளுப் பொடி வீட்டில் இருந்தால், இட்லி - தோசைக்கு அவசர நேரங்களில் வேறு சைடிஷ் தேட வேண்டாம். இட்லி - தோசை மட்டுமல்ல, சப்பாத்தி - பரோட்டாவுக்குக்கூட எள்ளுப் பொடி சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.

என்ன தேவை?

எள், உளுத்தம்பருப்பு - தலா 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். தேவையானபோது பயன்படுத்தவும்.

நேற்றைய ரெசிபி-மிளகு சீரகப்பொடி

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 5 ஜுன் 2021