மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் வெஜ் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா:  ஓட்ஸ் வெஜ் பணியாரம்

திடீரென வீட்டுக்கு விருந்தினர்கள் வந்துவிட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவில் ஒரு சிறிதளவு வெங்காயம், இரண்டு பச்சை மிளகாயை நறுக்கிச் சேர்த்து, சீரகம் சேர்த்து, எண்ணெய்விட்டு நிமிடங்களில் சுவையான குழிப்பணியாரத்தை நம்மால் தயாரித்து விட முடியும். அந்த வகையில் சற்று வித்தியாசமாக இந்த ஓட்ஸ் வெஜ் பணியாரம் செய்து தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக்குள்ளே வலம்வரும் வீட்டிலுள்ள அனைவரையும் அசத்தலாம்.

என்ன தேவை?

ஓட்ஸ் - முக்கால் கப்

ரவை - முக்கால் கப்

கோதுமை மாவு - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு

நீர்மோர் - கரைக்கத் தேவையான அளவு

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

நறுக்கிய காய்கறிகள் (வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ்) - அரை கப்

நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், ரவை, கோதுமை மாவு, நீர்மோர், சமையல் சோடா, உப்பு சேர்த்து தோசை மாவுப்பதத்துக்குக் கரைத்துவைக்கவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து இத்துடன் காய்கறிகள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அரை பதத்துக்கு வெந்ததும் இறக்கி மாவுடன் கலக்கவும்.

குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி - சத்துக்குறையாமல் காய்கறிகளைச் சமைக்க...

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 14 ஜுன் 2021