மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

வயதானவர்களுக்கும் பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற உணவு பணியாரம். பிரமாதமாகச் சமைக்கத் தெரியாதவர்கள்கூட அரை மணி நேரத்தில் செய்து மற்றவர்களை அசத்தக்கூடிய பலகார வகையான பணியாரத்தைப் பெண்களுக்கேற்ற சத்துமிக்க உணவாகவும் மாற்ற முடியும். அதற்கு இந்தக் கறுப்பு உளுந்துப் பணியாரம் உதவும்.

என்ன தேவை?

பச்சரிசி, இட்லி அரிசி, உடைத்த கறுப்பு உளுந்து - தலா முக்கால் கப்

காய்ந்த மிளகாய் - 3

மிளகு - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்தை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், மிளகு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து அரைத்து மாவுடன் கலக்கவும். ஆறு மணி நேரம் புளிக்கவைக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி - ஓட்ஸ் வெஜ் பணியாரம்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

செவ்வாய் 15 ஜுன் 2021