மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: இட்லி மாவு சுய்யம்

கிச்சன் கீர்த்தனா: இட்லி மாவு சுய்யம்

பாரம்பரிய பட்சணமான சுய்யம்... சிய்யம், சுகியம், சீயன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பண்டிகை நாட்களில் செய்யப்படும் இந்த சுய்யத்தை வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் செய்து அனைவரையும் அசத்தலாம்.

என்ன தேவை?

இட்லி மாவு (புளிக்காமல் இருக்க வேண்டும்) – ஒரு கப்

கடலைப்பருப்பு – ஓர் ஆழாக்கு

தேங்காய்த் துருவல் – அரை மூடியைத் துருவிக்கொள்ளவும்

ஏலக்காய், சுக்குப்பொடி – தலா அரை டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

பொடித்த வெல்லம் – 200 கிராம்

உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து முக்கால் பதம் வேகவைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு சூடாக்கி அதில் தேங்காய்த் துருவலை இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.

முக்கால் பதம் வேகவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பின்னர் இக்கலவையை உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.

இட்லி மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டைகளை இட்லி மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: சப்போட்டா கேசரி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 6 ஜூலை 2021