தமிழகத்துக்கு மிக கனமழை: வானிலை மையம்!

public

வரும் நாட்களில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடையநல்லூரில் 14 செ.மீ. மழை பதிவானது. கள்ளக்குறிச்சி, எறையூரில் தலா 13, ஆரணி, மரக்காணத்தில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையிலும் மழை விட்டு விட்டு கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் கிரீம்ஸ் சாலையில் ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இவ்வாறு தேனி, திண்டுக்கல், விருதுநகர் என மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை மற்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ந்த வானிலையே நிலவுகிறது.

இந்நிலையில், தமிழகத்துக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (ஜூலை 11) உருவாகிறது. தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர பகுதிகளில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோன்று நாளை (ஜூலை 10) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *