மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: பானகம்!

கிச்சன் கீர்த்தனா: பானகம்!

ஆடி மாதம் அனல் குறைந்து புது மழை பொழியும் காலம் என்பதால் அம்மை, காய்ச்சல், வெப்பு நோய்கள் எனப் பலவும் பரவும். இதனால் அம்மனுக்குக் கூழ், துள்ளு மாவு, இளநீர், மஞ்சள் - வேப்பிலை கலந்த தீர்த்தம், வெள்ளரிப் பிஞ்சு, பானகம் என எளிமையான, குளிர்ந்த பிரசாதங்களையே படைப்பார்கள். பாரம்பர்ய விழாக்களை மறந்துவரும் இன்றைய சூழலில் வெப்பம் தணிக்கும் அற்புத பானம் இந்தப் பானகம். இளநீர், மோருக்குப் பிறகு கிராமங்களில் கோடைக்காலத்தில் அதிகம் பயன்படும் பானம் இது. எளிமையாகத் தயாரிக்கப்படும் இந்தப் பானம் உற்சாகத்தை அளிக்கக்கூடியது.

என்ன தேவை?

புளி - 150 கிராம் (அ) எலுமிச்சைப்பழம் - 3

வெல்லம் - 250 கிராம்

சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

பச்சைக் கற்பூரம் (விரும்பினால்) - சிறிதளவு

தண்ணீர் - தேவைக்கேற்ப

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும். அல்லது எலுமிச்சைச் சாறெடுத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்துக்கொள்ளவும். பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித்தண்ணீருடன் / எலுமிச்சைச்சாற்றுடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு அதில் சுக்குப்பொடி, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கோயிலுக்குக் கொடுப்பது என்றால் பச்சைக் கற்பூரம் கலந்தால் சிறப்பு.

சண்டே ஸ்பெஷல்: வாங்க பரோட்டா சாப்பிடலாம்!

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 19 ஜூலை 2021