vகிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை பிரட்டல்

public

�நோய்கள் அதிகம் பரவும் ஆடி மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட முருங்கைக்கீரையை உணவில் சேர்ப்பது நலம் என்று அறிந்துகொண்ட நம் முன்னோர்கள் கூழுக்குத் தொடுகறியாக இந்த முருங்கைக்கீரை பிரட்டலைச் சேர்த்து வழங்கியிருக்கிறார்கள். முருங்கைக்கீரை ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், வெப்ப நோய்களைத் தணிக்கவும் சிறந்தது என்கிறார்கள். அம்மனுக்கு உகந்த நைவேத்தியங்களில் இந்த முருங்கைக்கீரை பிரட்டலும் முக்கியமானது.

**என்ன தேவை?**

முருங்கைக்கீரை – ஒரு கட்டு (ஆய்ந்துகொள்ளவும்)

பச்சரிசி – ஒரு கைப்பிடி அளவு

தேங்காய்த் துருவல் – கீரையின் அளவுக்கேற்ப

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 5 (கிள்ளவும்)

வெங்காயம் (விரும்பினால்) – 2 (நறுக்கிக்கொள்ளவும்)

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

**எப்படிச் செய்வது?**

முதலில் பச்சரிசியை வெறும் சட்டியில் வறுத்துக் கொரகொரவெனப் பொடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்த்துத் தாளித்து, (விரும்பினால்) வெங்காயம் சேர்த்து வதக்கி, இத்துடன் கீரையைச் சேர்த்துக் கிளறி, தேவையான உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறவும். இதில் பச்சரிசிப் பொடியைத் தூவிக் கிளறி இறக்கவும்.

**குறிப்பு:**

இந்த முருங்கைக்கீரை பிரட்டலைக் கூழோடு மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். கூழுக்கு இது சூப்பர் காம்பினேஷன்.

**[நேற்றைய ரெசிப்பி: கேழ்வரகுக் கூழ்!](https://www.minnambalam.com/public/2021/07/21/1/kelvaragu-cool)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *