மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: புளி இடியாப்பம்

கிச்சன் கீர்த்தனா: புளி இடியாப்பம்

இன்ஸ்டன்ட் உணவுகளில் ஒன்றாகிவிட்ட இடியாப்பம், இப்போதெல்லாம் வீடுகளில் அதிகம் செய்யப்படுவதில்லை. கடைகளில் கிடைக்கிற இன்ஸ்டன்ட் வகை இடியாப்பம், செய்வதற்குச் சுலபமாக இருந்தாலும் சுவையிலும் ஆரோக்கியத்திலும் வீட்டில் செய்வதற்கு ஈடாகாது. இடியாப்பத்துக்கு மாவு தயாரிக்கும் வேலை பக்குவமாகச் செய்யப்பட வேண்டியது. நேரமின்மையாலும், மாவு தயாரிக்கும் பக்குவம் கைவராததாலும் பலரும் வீடுகளில் இடியாப்பம் செய்வதைத் தவிர்க்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் வித்தியாசமான சுவையில் இந்த புளி இடியாப்பம் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.

என்ன தேவை?

இடியாப்ப மாவு - 2 கப்

உப்பு - தேவையான அளவு

புளிக்காய்ச்சல் செய்ய:

கெட்டியான புளிக்கரைசல் - ஒரு கப்

மஞ்சள்தூள், துருவிய வெல்லம் - தலா ஒரு டீஸ்பூன்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 6

கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

இடியாப்ப மாவுடன் உப்பு கலந்த முக்கால் கப் சுடுநீரை ஊற்றிக் கெட்டியாகப் பிசையவும். மாவை இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்க்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, அரைத்த பொடி, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இடியாப்பத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சல் சேர்த்துக் கலக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: மிளகு - சீரக இடியாப்பம்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 31 ஜூலை 2021