மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: ஆலூ சாட்

கிச்சன் கீர்த்தனா: ஆலூ சாட்

வட மாநிலங்களின் பிரபலமான பல சாட் உணவுகள் மற்றும் தெருக்கடை ஸ்பெஷல் உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட முடியாதா என்று ஏங்குபவர்கள் பலர். அவர்களுக்கு இந்த ஆலூ சாட் செய்து கொடுத்து அசத்தலாம். உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் சத்துகள் உள்ளன. உருளையைத் தோலுடன் எடுத்துக்கொண்டால் நார்ச்சத்தையும் பெறலாம்.

என்ன தேவை?

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு...

பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் நறுக்கவும்)

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

உலர்ந்த மாங்காய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

சாட் செய்ய...

கெட்டி தயிர் - அரை கப் (அடித்து வைக்கவும்)

பூண்டுச் சட்னி - 2 டீஸ்பூன்

இனிப்புச் சட்னி - 2 டீஸ்பூன்

பச்சைச் சட்னி - 4 டீஸ்பூன்

சாட் மசாலா - அரை டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி (சேவ்) - அரை கப்

நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கைத் தவிர உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப்பொருள்களுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலந்து கொள்ளவும். பிறகு இக்கலவையில் உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி அதில் ஊறவைத்து இருக்கும் கலவையைச் சேர்த்து நான்கைந்து நிமிடங்கள் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் சிறிது உருளைக்கிழங்கு கலவையை வைத்து அதன் மேல் சிறிது தயிர், பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு அதன் மீது சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்), கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: சேவ் பூரி

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 10 ஆக 2021