கிச்சன் கீர்த்தனா: சைனீஸ் பேல்

public

பல நூற்றாண்டுகளாக சீனாவிலும் சீனர் சென்ற இடமெங்கும் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்று சைனீஸ் சமையல். இன்று உலகில் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் சீன உணவும் ஒன்றாகும். அவற்றில் இந்த சைனீஸ் பேல் முக்கிய இடம் பிடிக்கிறது. குழந்தைகள் அதிகம் விரும்பும் இந்த சைனீஸ் பேலை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

**என்ன தேவை?**

ஹாக்கா நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)

குடமிளகாய் – ஒன்று

முட்டைகோஸ் – கால் கிலோ

வெங்காயத்தாள் – ஒரு கட்டு

பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பற்கள்

செஷ்வான் சாஸ் – இரண்டு டேபிள்ஸ்பூன்

சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்

வினிகர் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவைகேற்ப்ப

**எப்படிச் செய்வது?**

குடமிளகாய், முட்டைகோஸை மெலிதாக, நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதிலுள்ள பச்சை பகுதியில் சிறிதளவை மட்டும் அலங்கரிப்பதற்காக தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலக்கவும். இதில் நூடுல்ஸைச் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும். பிறகு தண்ணீர் வடிக்கப்பட்ட நூடுல்ஸை சாதா தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும். பிறகு நூடுல்ஸை ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்கு விரவி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வேகவைத்த நூடுல்ஸை அதில் சேர்த்து மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும். பூண்டு நிறம் மாறியதும், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும். பிறகு இத்துடன் நூடுல்ஸ் தவிர மீதமுள்ள மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து கலந்து இறக்கவும். கடைசியாக பொரித்த நூடுல்ஸை உடைத்து இக்கலவையுடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: பேல் பூரி](https://www.minnambalam.com/public/2021/08/13/1/bale-puri)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *