மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: மேகி தோசை!

கிச்சன் கீர்த்தனா: மேகி தோசை!

தமிழக உணவுக் கலாச்சாரத்தில் இரண்டற கலந்துவிட்ட டிபன், தோசை. தோசைக்கென்றே தனியாக உணவகங்கள் தொடங்கப்பட்டு, அவை மக்களிடையே பேராதரவைப் பெற்று வருகின்றன. ‘இன்னிக்கு டிபன் உப்புமா’ என்றால் முகம் சுளிக்கும் குழந்தைகள்கூட ‘தோசை’ என்றால், ‘ஒகே’ என்பார்கள். அதுவும் அவர்களுக்குப் பிடித்த ‘மேகி' யில் தோசை என்றால் ‘சீக்கிரம் கொண்டு வா’ என்று பரபரப்பார்கள்.

என்ன தேவை?

சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

வேகவைத்த மேகி - 60 கிராம்

பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

மயோனைஸ் - 2 டீஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

பீட்சா சாஸ் - அரை டீஸ்பூன்

சீஸ் - 20 கிராம்

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

ரெட் சட்னி - அரை கரண்டி

எப்படிச் செய்வது?

தோசைக்கல்லில் 2 கரண்டி சிறுதானிய தோசை மாவை ஊற்றி மெல்லியதாகத் தேய்த்துக் கொள்ளவும். பின்னர் தோசையின் மேல் வெண்ணெய் போட்டு, அது உருகிய உடன் நறுக்கிவைத்த வெங்காயத்தைப் போடவும். அதைத் தொடர்ந்து மயோனைஸ், பீட்சா சாஸ், வேகவைத்த மேகி சேர்க்கவும். பின்னர் மேகி மேல் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் ரெட் சட்னி போட்டுக் கிளறி, தோசையின் மேல் சீஸைத் துருவிச் சேர்த்து அடுப்பில் இருந்து எடுத்து தட்டில் வைத்தால், சுவையான மேகி தோசை தயார்.

சிறுதானிய தோசை மாவு தயாரிக்க...

கேரள சிவப்பரிசியை தேவையான அளவு எடுத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகளையும் மாவாக அரைத்து இரண்டையும் சரிபாதி விகிதத்தில் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தோசைக்கு மாவுக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மாவு அரைப்பது சிரமமாகத் தோன்றினால் சிவப்பரிசி மாவும் சிறுதானிய வகைகள் மாவும் இரண்டுமே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உப்பு, தண்ணீர் சேர்த்து தயார் செய்யலாம். இரவு தோசை ஊற்றப்போவதாக இருந்தால் காலையிலேயே மாவுக் கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் புளிப்புத் தன்மை ஏற்பட்டு, தோசையின் சுவை பிரமாதமாக இருக்கும்.

ரெட் சட்னி தயாரிக்க...

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடான வுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதங்கியதும் அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப புளி சேர்த்து கிளறி இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து இறக்கினால் ரெட் சட்னி செய்வதற்கான மசாலா கலவை தயார். மிக்ஸியில் சட்னிக்குத் தேவையான அளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து அத்துடன் தயார் செய்துவைத்த மசாலா கலவையைக்கொட்டி அரைத்தெடுத்தால் வகை வகையான தோசைகளுடன் சேர்க்கும் ரெட் சட்னி தயார்.

நேற்றைய ரெசிப்பி: பழங்கள் சாப்பிட உகந்த நேரம் எது?

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

திங்கள் 16 ஆக 2021