மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

2021 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பதிவுத் துறையில் வருவாய் குறைந்து இருந்தபோதிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 16ஆம்தேதி வரை ரூ.5,389 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2,021 கோடி அதிகம் ஆகும். இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பதிவுத் துறையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கடந்த 16ஆம் தேதி வரையிலான காலத்தில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.3,052.87 கோடியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரூ.2,020.81 கோடி அதிகமான வருவாய் பதிவுத் துறையில் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் விளைவாக இந்தத் துறையால் ஈட்டப்படும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

“2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்படும். பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடாக பதிவு நடந்து, அது உண்மை என்று நிரூப்பிக்கப்பட்டால், சார் பதிவாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டு வரப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் காரணமாகவே இந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்படும்” என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.வி.மூர்த்தி கூறிய நிலையில் இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வருவாய் குறைந்து இருந்தபோதிலும், அடுத்து வந்த மாதங்களில் வருவாய் சரிசெய்யப்பட்டு கடந்த 16ஆம் தேதி வரை ஈட்டப்பட்டுள்ள வருவாயானது பேரிடர் ஏதும் இல்லாத இயல்புநிலை காலத்துக்கான வருவாயைவிட அதிகரித்துள்ளது பதிவுத் துறையின் சாதனையாகும்.

மேலும், “சார்பதிவக எல்லைகள் பொதுமக்களின் வசதிக்கேற்ப சீரமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் அறிவித்துள்ளதைத்தொடர்ந்து அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தங்கள் பகுதியில் சீரமைக்கப்பட வேண்டிய சார்பதிவக எல்லைகள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட பதிவாளர்களுக்கு எழுத்து மூலமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம்” என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

-ராஜ்

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

திங்கள் 20 செப் 2021