ரிலாக்ஸ் டைம்: ஜவ்வரிசி லட்டு!

public

ஜவ்வரிசியில் பாயசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு மாறுதலுக்காக ஜவ்வரிசியை வைத்து எளிமையாகச் செய்யக்கூடிய அருமையான லட்டு செய்து சாப்பிடுங்கள். உடனடி உற்சாகம் பெறுவீர்கள்.

எப்படிச் செய்வது?

100 கிராம் ஜவ்வரிசியைத் தண்ணீரில் சுமார் எட்டு மணி நேரம் ஊறவிடவும். 100 கிராம் முந்திரியைக் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களுக்குக் கிளறிக்கொண்டே இருந்தால் வெந்து உதிரியாக மாறும். பின்னர் இதில் 100 கிராம் சர்க்கரை, ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேகவிடவும். அத்துடன், தண்ணீரில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வப்போது தேவையான அளவு நெய் சேர்த்து கிளறவும். ஜவ்வரிசி நன்றாக வெந்து வாணலியில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் பொடித்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். சூடு ஓரளவுக்குத் தணிந்ததும், கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருண்டைகள் செய்து வைக்கவும்.

சிறப்பு

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது. அரிசி உணவைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *