மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: சாமை சாதம் - குடமிளகாய் பருப்பு ரசம்

கிச்சன் கீர்த்தனா: சாமை சாதம் - குடமிளகாய் பருப்பு ரசம்

சிறுதானிய சமையல் ஆரோக்கியமானது என்று கடந்த வருடங்களில் கூவிக்கூவி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சுவையின் காரணமாகப் பலரும் அவற்றின் பக்கம் திரும்புவதில்லை. சிறுதானியங்களில் சமைத்தது என்று நீங்களே சத்தியம் செய்தாலும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அவற்றை அறுசுவையில் சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அது மட்டுமா... சிறுதானியங்களில் குறிப்பிட்ட சில உணவுகளைத்தான் சமைக்க முடியும் என்றும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல... ஸ்டார்ட்டர் முதல் டெஸர்ட்வரை சிறுதானியங்களில் விருந்தே சமைக்கலாம். இந்த வார வீக் எண்டை சிறுதானிய சமையலுடன் ஆரோக்கியமாக என்ஜாய் செய்யுங்கள்...

என்ன தேவை?

சாமை சாதம் - ஒரு கப்

குடமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கவும்)

துவரம்பருப்பு - கால் கப்

மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பூண்டு - 4 பல்

தக்காளி - 2

காய்ந்த மிளகாய் - 2

மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் (தாளிக்க) - 2

கடுகு, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றவும். கொதிவந்ததும் வேகவைத்த பருப்பு, நறுக்கிய குடமிளகாய் சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சாமை சாதத்துடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: உருளைக்கிழங்கு கம்பு தட்டை

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

சனி 16 அக் 2021