மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 நவ 2021

கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல்!

கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல்!

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை 25 சதவிகிதம் வரை உயர்த்தியிருக்கிறது. தற்போது ஏர்டெல் பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் விலை ரூ.99 முதல் தொடங்குகின்றன. முன்னதாக ஏர்டெல் தனது ரூ.49 சலுகையை நீக்கியது. இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் வழங்கப்படவில்லை.

எஸ்எம்எஸ் பலன்கள் அடங்கிய சலுகை கட்டணங்கள் தற்போது ரூ.179 முதல் தொடங்குகின்றன. முன்னதாக இந்த சலுகை விலை ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 219 சலுகையின் விலை தற்போது ரூ. 265 என மாறி இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல பிரீபெயிட் சலுகையான ரூ.598 சலுகை கட்டணம் தற்போது ரூ.719 என மாறி இருக்கிறது. இதில் பயனர்கள் 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா பெற முடியும். மற்ற பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் அதிகபட்சமாக 20 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

புதிய விலை பட்டியல் நவம்பர் 26ஆம் தேதி அமலுக்கு வரும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இதுவரை சலுகை கட்டணங்கள் விலையை உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 23 நவ 2021