மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று புதிதாக பதவியேற்ற ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் நீலகிரி ஆட்சியராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய கடந்த நவம்பர் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆட்சியர் திவ்யா தொடர்ந்து விடுப்பிலேயே இருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் பொறுப்பு ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக ஐஏஎஸ் அம்ரித்தை நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று(நவம்பர் 26) காலை நீலகிரி மாவட்டத்தின் 114வது ஆட்சியராக அம்ரித் பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அம்ரித், “நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று பதவி ஏற்றுக் கொண்டேன். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படியும், முதல்வர் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் உள்பட அனைத்து உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படியும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும், அரசின் திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த ஆட்சியராக நடவடிக்கை எடுப்பேன். நீலகிரி மாவட்டம் சூழலியல் முக்கியத்துவமான பகுதி என்பதால் மனிதர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் விலங்குகள் என அனைவரும் வாழ தகுந்த மாவட்டமாக விளங்க வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கும். பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம், உடனடியாக தீர்வு காணப்படும்” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வெள்ளி 26 நவ 2021