மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பொடி

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பொடி

ஃப்ரிட்ஜ் இல்லாத காலத்திலேயே வீட்டில் பொடி அரைத்து பல மாதங்கள் உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நம்மவர்கள். தற்போது பொடி வகை பாக்கெட்களில் வர தொடங்கி விட்டாலும் , இன்னமும் பல்வேறு வீடுகளில் பொடி வகைகளை அரைத்து பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு பொடிகளை எப்படிச் செய்வது என்ற திண்டாட்டம் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தேங்காய்ப்பொடி ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

கடுகு - 2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - அரை கப்

காய்ந்த மிளகாய் - 6 - 8

பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

துருவிய தேங்காய் - 2 கப்

உப்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

அடுப்பில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். பின் அதே எண்ணெயில் பெருங்காயத்தூள் மற்றும் துருவிய தேங்காய் போட்டு வறுக்கவும். மிகவும் சிவக்க வறுக்க வேண்டாம். இவற்றுடன் புளி, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: புளியோதரைப்பொடி

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 4 டிச 2021