மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விடுமுறை கேட்ட மாணவனை பள்ளிக்கு சென்று நன்றாக படிக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரங்களில் மழை தீவிரமாக பெய்து வந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யவில்லை என்றாலும், நெல்லை, தென்காசி, மதுரை,விருதுநகர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஈஸ்வரமூர்த்தி என்ற மாணவன், ட்விட்டரில், கரூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியரை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், "தற்போது மழை குறைந்துவிட்டது பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி. நண்பர்களையும் கிளம்பச் சொல்லுங்க, நிறைய படிக்க வேண்டி இருக்கு" என்று பதிலளித்துள்ளார்.

இப்படி ட்விட்டரில் மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை கேட்பது முதல் முறை கிடையாது. முன்னதாக விருதுநகர் மாவட்ட மாணவர்கள் அம்மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் பலமுறை ட்விட்டரில் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்ததும் உண்டு. ஆனால் அனைவருக்கும் பொறுமையாக ஆட்சியர் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 4 டிச 2021