மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

ஏடிஎம் கட்டணத்தை உயர்த்த ஆர்பிஐ அனுமதி!

ஏடிஎம் கட்டணத்தை உயர்த்த ஆர்பிஐ அனுமதி!

வங்கி வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணத்தை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் உயர்த்திக்கொள்ள வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதி வழங்கி உள்ளது.இதன்படி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏடிஎம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும்.

வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் மூன்று முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் ஐந்து முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி உடன் ரூ.23.60 கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணத்தை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் உயர்த்திக்கொள்ள வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏடிஎம்களைப் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் அடுத்தாண்டு முதல் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும். அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்திருப்பதாலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 4 டிச 2021