மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 ஜன 2022

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று மாலை நிறைவு பெற்றது. இந்த போட்டியின்போது காளை முட்டி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் சூரியூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து வாடிவாசலிலிருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 486 காளைகளும் ஐந்து சுற்றுகளில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும் களம் இறங்கினர்.

இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசு 12 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அதுபோன்று 9 காளைகளை அடக்கிய திருச்சி மாவட்டம் பூலாங்குடி பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது.

இந்த போட்டியின்போது மொத்தம் 42 பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். வாடிவாசலிலிருந்து காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 112 எண் கொண்ட காளையை அதன் உரிமையாளர் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை சாலையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் அழைத்து வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காளை உரிமையாளரான மீனாட்சி சுந்தரத்தை முட்டியது. இதனால் காயங்களுடன் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதிக ரத்தம் வெளியானதால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

அதுபோன்று சூரியூர் ஜல்லிக்கட்டு விழாக் குழு ஒருங்கிணைப்பாளரான ராஜா என்பவரும் மாடு முட்டியதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-பிரியா

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 16 ஜன 2022