கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சைனஸ் தொந்தரவு – உணவின் மூலம் விடுபடலாமா?

public

சைனஸ்… பலருக்கும் பெருந்தொல்லை. சைனஸ் தலைவலி அன்றைய நாளையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிடுகிறது. அந்த நேரத்தில் முகம் வீங்கி, வெளியே செல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. எந்த நோயாக இருந்தாலும் அதை வரும் முன் தடுத்து, அதற்கேற்ற மருத்துவமுறைகளையும், வாழ்வியல் உத்திகளையும் பின்பற்றுவதே சிறந்த வழி என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

சைனஸ் என்று சொல்லப்படக்கூடிய `Sinusitis’ குறித்த தெளிவான புரிந்துணர்வு பெரும்பாலானோரிடம் இல்லை. சாதாரணமாக சளி பிடித்தால்கூட சைனஸ் பிரச்சினையாக இருக்குமோ என்று பதறிப்போய்விடுகிறார்கள்.

இந்தச் சூழலில் சைனஸ் என்றால் என்ன? பிரச்சினை ஏன் ஏற்படுகிறது? அதை வீட்டிலேயே குணப்படுத்த இயலுமா? உணவின் மூலம் விடுபடலாமா? இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு எளிமையான தீர்வு இதோ…

நம் தலையின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மூக்கை சுற்றியிருக்கும் பகுதிகளில் காற்று நிரம்பி இருக்கும். அப்படி இல்லையென்றால் தலையின் எடை கனமாகி அதைக் கழுத்தால் பேலன்ஸ் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதற்காக இயற்கையில் அமைந்திருக்கும் அம்சம் இது. அப்படியாக காற்று நிரம்பியுள்ள பகுதிகளுக்குப் பெயர்தான் சைனஸ்.

மூக்கின் ஈரப்பதத்துக்காக உற்பத்தியாகிற mucus படலம் மூக்குக்கு வராமல், உள்ளேயே காற்று இருக்கும் இடத்தில் அடைத்துக்கொண்டு அதனால் நீர் கோத்தால் அதுதான் சைனஸ் பிரச்சினையாக மாறுகிறது. இதன் விளைவாக தலையின் கனம் கூடுதல், தலைவலி, கண் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

சாதாரணமாக சளி பிடித்தால்கூட சைனஸில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் மூக்கைச் சுற்றியுள்ள இலகுவான தசைகள் வீங்கிக்கொள்ளும். இதன் காரணமாகத்தான் சளி பிடித்தால் தலைவலி ஏற்படுகிறது.

சாதாரணமான சளித்தொந்தரவால் ஏற்படும் சைனஸ் பிரச்சினை நிரந்தரமானதல்ல. இதை வீட்டிலேயே குணப்படுத்த முடியும். ஆவி பிடிப்பதன் மூலம் இப்பிரச்சினையை வீட்டிலேயே சரி செய்யலாம். வெறும் தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி ஆவி பிடித்தாலே போதும். வெந்நீருக்குள் தைலம், ஆவி பிடிக்கும் மாத்திரை, மஞ்சள் என எதுவும் கலக்கத் தேவையில்லை. ஐந்து நிமிடங்கள் பிடித்தாலே போதும். இப்பிரச்சினை குணமாகிவிடும்.

ஆவி பிடிக்கும் இயந்திரத்தை இப்போது பலரும் வாங்கி வருகின்றனர். அதைப் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது அதிக கொதிநிலையில், அதிவேகத்தில் நீராவியை வெளியிடுவதால் மூக்கில் வேறு சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

10 பேர் சைனஸ் தொந்தரவு என்று வந்தார்கள் என்றால் அவர்களில் 8 பேருக்கு சைனஸ் பிரச்சினை இருக்காது. சுவாச ரீதியாக ஒவ்வாமை (அலர்ஜி) அவர்களுக்கு இருக்கும். அதன் விளைவாக அவர்கள் தொடர்ச்சியாக தும்மல் ஏற்படுவது போன்ற காரணங்களால் சைனஸ் பிரச்சினைக்கு ஆளாகியிருப்பார்கள். ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசி, புகை, வாசனைத் திரவியங்கள், உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கச் சொல்லிவிட்டு ஒவ்வாமைக்கான சிகிச்சையை அளித்தால், இவர்களுக்கு சைனஸ் பிரச்சினை தானாக சரியாகிவிடும்.

முதலில் எது சைனஸ் என்கிற புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். சளி பிடித்து சற்றே முகம் வீங்கி விட்டாலோ, மூக்கிலிருந்து நீர் வடிந்தாலோ நீங்களாகவே உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. சிலர் மருத்துவரைச் சந்திக்க வரும் முன்னர் அவர்களாகவே முடிவு செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். அது தேவையே இல்லை. மருத்துவரை அணுகிய பிறகு மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தாலே போதும். இப்பிரச்சினையை குணப்படுத்தி விட முடியும்.

**சைனஸ் பிரச்சினைக்காகச் செய்யக் கூடாதவை**

* கடற்கரை போன்ற அதிகக் காற்று உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* ஜன்னல் ஓர சீட்டில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* குளிர்பானங்கள், குளிர்ச்சியான காற்று, குளிர்ச்சியான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* பகல் மற்றும் மதிய வேளையில் தூங்கக் கூடாது.

* பால் பொருட்கள், தயிர், துரித உணவுகள், கோதுமை, மைதா, பானிபூரி, மசாலா பூரி, சாஸ், கெட்ச்அப், அதிகப் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.

* ஃப்ரிட்ஜில் வைத்த உணவைத் தவிர்க்க வேண்டும். சூடுபடுத்திக்கூட சாப்பிட வேண்டாம்.

* சைனஸ் வலி சமயத்தில் நீர் காய், பழங்களைச் சாப்பிடக் கூடாது.

* ஐஸ் வாட்டர், ஐஸ் சேர்த்த பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும்.

* செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட ஐஸ், ஸ்வீட்ஸ், கேசரி, எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடக் கூடாது.

**[நேற்றைய ரெசிப்பி:செட்டிநாடு மட்டன் சுக்கா](https://www.minnambalam.com/public/2022/01/29/1/chettinad-mutton-sukka)**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *