hகிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி பூசணி கீர்

public

ிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் ஒன்று ஜவ்வரிசி. ஜவ்வரிசியை பால் அல்லது தண்ணீரில் நன்கு வேகவைத்தோ அதோடு சர்க்கரையோ அல்லது மசாலாவோ அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்து சாப்பிடலாம். அதில் ஒன்று இந்த சுவையான ஜவ்வரிசி பூசணி கீர். ஜவ்வரிசியில் செய்த உணவுகளை தாராளமாகக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
**என்ன தேவை?**
ஜவ்வரிசி – ஒரு கப்
துருவிய பூசணி – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப் அல்லது விருப்பத்துக்கேற்ப
பால் – அரை லிட்டர்
பொடியாக நறுக்கிய அல்லது துருவிய டிரை ஃப்ரூட்ஸ் (பாதாம், முந்திரி, பிஸ்தா) – விருப்பத்துக்கேற்ப
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
ஜவ்வரிசியைக் கழுவி, ஊறவைக்கவும். பாலைக் கொதிக்கவிடவும். பின்னர் இதனுடன் ஊறவைத்த ஜவ்வரிசியைத் தண்ணீர் வடித்து சேர்த்து, ஜவ்வரிசி வேகும்வரை அடுப்பை சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும். ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் துருவிய பூசணியைச் சேர்த்து, பூசணி வேகும்வரை மறுபடியும் கொதிக்கவிடவும். பிறகு இதனுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கலவை கெட்டியாகும்வரை கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். பொடியாக நறுக்கிய அல்லது துருவிய டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி பைனாப்பிள் அல்வா](https://www.minnambalam.com/public/2022/02/10/1/pineapple-halva)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *