மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: மைசூர் சில்லி சிக்கன்

கிச்சன் கீர்த்தனா: மைசூர் சில்லி சிக்கன்

மைசூர்... போண்டா, மசால் தோசை, மைசூர்பாகுக்கு மட்டுமல்ல... இந்த சில்லி சிக்கனுக்கும் புகழ்பெற்றது. அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் இந்த மைசூர் சில்லி சிக்கனை நீங்களும் உங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம். சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன்.

என்ன தேவை?

சிக்கன் – கால் கிலோ(துண்டுகளாக நறுக்கவும்)

சதுர துண்டுகளாக நறுக்கிய

வெங்காயம் – 100 கிராம்

சதுர துண்டுகளாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – 100 கிராம்

பச்சை மிளகாய் – 5

(வட்ட வடிவமாக நறுக்கவும்)

தோல் சீவி, பொடியாக நறுக்கிய

இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு –

ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – அரை கப்

வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை

எண்ணெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: கோடி வெப்புடு!

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

சனி 26 பிப் 2022