}கிச்சன் கீர்த்தனா: பரங்கிக்காய் புளிப் பச்சடி

public

காற்று, மழை, பனி, வெயில் எனப் பருவகாலம் மாறும்போது அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்ப உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன், சூழலுக்கேற்ப நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவற்றை சரி செய்ய உதவும் நீர்ச்சத்து, மாவுச்சத்து நிறைந்த பரங்கிக்காய். இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கண், தோலுக்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் அனைவருக்கும் ஏற்றது இந்த பரங்கிக்காய் புளிப் பச்சடி.
**என்ன தேவை?**
சிவப்பு பரங்கிக்காய் – ஒரு கீற்று
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பனை வெல்லம் – 50 கிராம்
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
பரங்கிக்காயைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பரங்கித் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது வதக்கி, புளியைக் கரைத்துக் கொதிக்கவிடவும். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவலை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து, பனை வெல்லம் சேர்த்து, கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து இறக்கவும்.
**குறிப்பு:** சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். உப்புமா, இட்லிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
[நேற்றைய ரெசிப்பி: பூசணிக்காய் மோர்க்கூட்டு](https://www.minnambalam.com/public/2022/03/30/1/pumkin-kootu)

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *