^கிச்சன் கீர்த்தனா: வெள்ளரி ஊறுகாய்

public

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளரிக்காய் பயிரிடப்பட்டு, உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அனைத்துத் தட்பவெட்ப சூழ்நிலைகளிலும், அனைத்து விதமான நிலங்களிலும் வளரக்கூடிய தன்மை வெள்ளரிக்கு உண்டு. வருடம் முழுவதும் பயிரிடப்பட்டாலும், மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையே இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கோடையில் மலிவாகக் கிடைக்கும் வெள்ளரியில் ஊறுகாய் செய்து வைத்து தேவையானபோது சுவைக்கலாம்.
**என்ன தேவை?**
பிஞ்சு வெள்ளரிக்காய் – ஒன்று
வினிகர் – அரை கப்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
மிளகு – கால் டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
வெள்ளரிக்காய் கசப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்த பிறகு, தோலைச் சீவி சிறிய துண்டுகளாக்கவும். ஈரத்தன்மை இல்லாமல் நன்கு காயவைத்த கண்ணாடி பாட்டிலில், வெள்ளரித் துண்டுகள், வினிகர், சர்க்கரை, மிளகு, கடுகு, இஞ்சி, உப்பு சேர்த்து கலக்கவும். பாட்டிலை மூடி, இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும். பிறகு, சாண்ட்விச், பர்கர் உடன் சேர்த்து சுவைக்கலாம்.
**[நேற்றைய ஸ்பெஷல்: வாட்டர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தலாமா?](https://www.minnambalam.com/public/2022/04/10/4/can-water-bottles-be-reused)**
.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *