மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஏப் 2022

கிச்சன் கீர்த்தனா: மட்டன் அண்ட் பீன்ஸ் கப் கேக் இட்லி

கிச்சன் கீர்த்தனா:  மட்டன் அண்ட் பீன்ஸ் கப் கேக் இட்லி

தென்னிந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெரும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். தற்போது மாவுடன் காய்கறிகளைச் சேர்த்து செய்யப்படும் இட்லி வகை பலராலும் விரும்பப்படுகிறது. அந்த வகையில் மட்டனையும் சேர்த்து இட்லி செய்ய இந்த ரெசிப்பி உதவும்.

ஸ்டப்பிங் செய்ய...

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய மட்டன் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - அரை கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

இட்லி செய்ய...

இட்லி மாவு - தேவையான அளவு

முட்டை - 2

சிலிக்கான் கப் கேக் மோல்ட் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்துக் கரையும்வரை வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மட்டன், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி ஆறவிடவும்.

ஒரு பவுலில் முட்டையை உடைத்துச் சேர்த்து, நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும். சிலிக்கான் கப் கேக் கப் மோல்டில் கால் கப்புக்கு இட்லி மாவை ஊற்றவும். அதன் மீது வதக்கி வைத்துள்ள மட்டன் கலவையை வைக்கவும். மீண்டும் இட்லி மாவை ஊற்றி அதன் மீது முட்டைக் கலவையை ஊற்றவும். இனி, அடுப்பில் இட்லிப் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டுகளில் இட்லி கப் மோல்டுகளை வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: கொண்டைக்கடலை - இறால் வறுவல் புலாவ்

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வியாழன் 28 ஏப் 2022