மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

கிச்சன் கீர்த்தனா: கீரை கோதுமை போண்டா

கிச்சன் கீர்த்தனா: கீரை கோதுமை போண்டா

தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளைச் சமாளிப்பது சற்று சிரமம்தான். டி.வியிலோ, மொபைலிலோ மூழ்கியிருக்கும் நேரத்தைத் தவிர... மற்ற நேரங்களில் ஏதாவது சாப்பிட கேட்பார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சட்டென்று செய்யக்கூடிய சத்தான இந்த கீரை கோதுமை போண்டா உதவும்.

என்ன தேவை?

முருங்கைக்கீரை இலை - அரை கப்

கோதுமை மாவு - ஒரு கப்

தண்ணீர் - முக்கால் கப்

சின்ன வெங்காயம் - 5 - 6

பச்சை மிளகாய் - ஒன்று

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கீரையைக் கழுவி ஒரு சுத்தமான துணியில் உலர்த்தவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியான மாவு போல் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: கீரை பீட்ரூட் பொரியல்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 13 மே 2022