மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

ட்விட்டர் நெட்வொர்க்கில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான ஸ்பேம் கணக்குகள் இருப்பதை நிறுவனம் நிரூபிக்கும் வரை ட்விட்டர் கையகப்படுத்துதலை நிறுத்தி வைக்கிறேன் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு தெரிவித்ததற்கு மாறாக, மைக்ரோ பிளாக்கிங் சேவையில் குறைந்தது 20 சதவிகிதம் ஸ்பேம் போட்கள் இருப்பதாக எலோன் மஸ்க் தெரிவித்தார்.

எலோன் மஸ்க் நீண்ட காலமாக ட்விட்டர் ஸ்பேம் போட்களை எதிர்த்து வருகிறார். உண்மையில், ஸ்பேம் போட்கள் ட்விட்டரின் மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினை என்று அவர் ஒருமுறை கூறினார். பரிவர்த்தனை முடிந்ததும், ட்விட்டர் நெட்வொர்க்கில் இருந்து ஸ்பேம் போட்கள் மற்றும் மோசடி கணக்குகளை ஒழிப்பதில் மஸ்க் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், நெட்வொர்க்கில் இருந்து தவறான மற்றும் ஸ்பேம் கணக்குகளை அகற்ற நிறுவனம் கடினமாக உழைக்கிறது என்று கூறினார். அகர்வாலின் கூற்றுப்படி, "ஒரு நாளைக்கு சுமார் 500,000 ஸ்பேம் கணக்குகளைப் பயனாளர்கள் கண்களுக்கு வரும் முன்னே ட்விட்டர் இடை நிறுத்துகிறது. மனித சரிபார்ப்பு சோதனைகளில் தேர்ச்சி பெற முடியாவிட்டால், ஸ்பேம் என்று நாங்கள் சந்தேகிக்கும் மில்லியன் கணக்கான கணக்குகளை ஒவ்வொரு வாரமும் நாங்கள் முடக்குகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும், "உண்மையான பயனர்களை தற்செயலாக இடைநீக்கம் செய்யாமல் முடிந்தவரை ஸ்பேமை அகற்ற எங்கள் குழு தொடர்ந்து எங்கள் அமைப்புகளையும் கொள்கைகளையும் புதுப்பித்து வருகிறது" என்று கூறினார்.

இந்த காலாண்டில் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் சுமார் 5 சதவிகிதம் ஸ்பேம் கணக்குகள் இருப்பதாக ட்விட்டர் கடந்த வாரம் கூறியது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்விட்டரின் கூற்றுகளை நிராகரித்து ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

புதன் 18 மே 2022