மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

மேற்கு வங்கத்தில் 78.9 சதவீத குடும்பங்களில் சைக்கிள்!

மேற்கு வங்கத்தில் 78.9 சதவீத குடும்பங்களில் சைக்கிள்!

மேற்கு வங்கத்தில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் 78.9 சதவீத வீடுகளில் சைக்கிள் உள்ளது என்று தெரியவந்துள்ளது. பொதுப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் பலரின் விருப்பமான போக்குவரத்து முறையாக சைக்கிள் உள்ளது. கிராமப்புற வங்காளத்தில் மட்டுமல்ல, கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள நியூ டவுன் போன்ற பகுதிகளிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் சைக்கிள்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. சால்ட் லேக் மற்றும் நியூ டவுன் ஆகிய இடங்களில் சாலைகளை ஒட்டி தனி சைக்கிள் பாதைகள் கட்டப்படுகின்றன. அதேபோன்று மற்ற இடங்களிளிலும் இதுபோன்ற பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மே 11ஆம் தேதி வரை, மேற்கு வங்கத்தில் சபூஜ் சதி என்னும் திட்டத்தின் கீழ் 1,03,97,444 மாணவர்கள் இலவச சைக்கிள்களைப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதுவே முதன்மைக் காரணம். இந்தத் திட்டம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுகிறது.

இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் சைக்கிள் உபயோகம் அதிகரித்து வருகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் ஒடிசாவில், 72.5 சதவீத குடும்பங்கள் சைக்கிள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சத்தீஸ்கரில், இந்த எண்ணிக்கை 70.8 சதவீதமாக உள்ளது. அதைத் தொடர்ந்து அசாமில் 70.3 சதவீதம், பஞ்சாபில் 67.8 சதவீதம், ஜார்கண்டில் 66.3 சதவீதம், பீகாரில் 64.8 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நாகாலாந்தில்தான் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் சைக்கிள் வைத்திருக்கின்றன. அங்கு 5.5 சதவீத குடும்பங்கள்தான் சைக்கிள் வைத்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வாங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி காரக்பூரில் உள்ள வித்யாசாகர் தொழில் பூங்காவில் சைக்கிள் உற்பத்தி மையத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

புதன் 18 மே 2022