மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

நியூயார்க் நகரத்தில் கொரோனா உயர்நிலை எச்சரிக்கை!

நியூயார்க் நகரத்தில் கொரோனா உயர்நிலை எச்சரிக்கை!

உலகளவில் தற்போது கொரோனா பரவல் மீ‌ண்டு‌ம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவே இல்லாத நாடு என்று பெயரெடுத்த வட கொரியாவிலும் போன வாரம் கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதால், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க் நகரத்தில் கொரோனா எச்சரிக்கை உயர்நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் நகர சுகாதார ஆணையர் டாக்டர் அஷ்வின் வாசன் கூறுகையில், "அமெரிக்காவில் தினசரி புதிய கொரோனா வழக்குகள் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகின்றன. தற்போது நியூயார்க் நகரம் உயர் கோவிட் எச்சரிக்கை நிலைக்கு மாறியுள்ளது, அதாவது நமது நண்பர்கள், அயலவர்கள், உறவினர்கள் மற்றும் சக பணியாளர்கள் நோய்வாய்ப்படாமல் இருக்கக்கூடிய தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம் நம்மையும் ஒருவரையொருவர் பாதுகாப்பதையும் இரட்டிப்பாக்க வேண்டிய நேரம் இது." என்று கூறினார்.

நியூயோர்க்கில் புதிய வழிகாட்டுதல் படி, அனைவரும் எல்லா இடத்திலும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தவேண்டும், குறிப்பாக உட்புற நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கடந்த திங்களன்று, "நாங்கள் முகமூடிகளை கட்டாயப்படுத்தும் கட்டத்தில் இல்லை." என்று கூறிய நிலையில் நகரத்தில் கொரோனா எச்சரிக்கை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா எச்சரிக்கை உச்சகட்ட நிலையை அடைய இன்னும் ஒரு படி மட்டுமே உள்ளதால், கொரோனா நிலையை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளையும், கொரோனா நெறிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட நியூயார்க் மாநில தரவுகள் படி, கடந்த திங்கட்கிழமை வரை உள்ள 7 நாள் கொரோனா பாதிப்பு சராசரி 5.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவுதான் என்றாலும், இது கொரோனா அடுத்த அலையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

புதன் 18 மே 2022