மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை!

கேரளத்தில் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி மற்றும் வட கேரளத்திலிருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் மிக கனமழை பெய்யும் என்றும், அதன்பிறகு 2 நாட்களுக்கு மிதமான கனமழை பெய்யும் என்றும் மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கேரளத்தில் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை ஏற்கனவே 5 குழுக்களை கேரளத்திற்கு அனுப்பியுள்ளது.

மலைப் பகுதிகளுக்கு அவசர தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும், மழை குறையும் வரை இரவு பயணத்தை தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் எடவபதி என்றும் அழைக்கப்படும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு முன்கூட்டியே பெய்யும் என்று கணித்துள்ளது.

மேலும் கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் அளவை குறிக்கும், ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும், மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செ.மீ வரை அதிக கனமழை பெய்யும்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

புதன் 18 மே 2022