மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

போலீஸ் மிரட்டுகிறது: திருந்தி வாழ்பவர் மனு!

போலீஸ் மிரட்டுகிறது: திருந்தி வாழ்பவர் மனு!

சாராயம் விற்பனை செய்யாவிட்டாலும் எங்களுக்கு மாமூல் தர வேண்டும் என்று போலீஸார் தன்னை மிரட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாராயம் விற்று திருந்தி வாழ்பவர் மனு அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "குடிப்பழக்கத்திற்கு அடிமையான நான் காரைக்கால் பகுதிக்கு சென்று மது அருந்துவேன். அங்கு மது விலை குறைவு என்பதால் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வருவேன். அதைத் தெரிந்தவர்கள் கேட்டால் கொடுத்து விட்டு பணம் வாங்கிக்கொள்வேன். இந்த நிலையில் நான் மது கடத்தியதாக பெரம்பூர் போலீஸார் என்னை கைது செய்தனர். தொடர்ந்து சாராயம் விற்பனை செய்ய வேண்டும் என்று போலீசார் கூறினர். இதனால் நான் சாராயம் விற்று வந்தேன். எனது மனைவி இறந்த நிலையில் மகன்களுக்கு திருமணமானதால் சாராயம் விற்பனை செய்வதை நான் நிறுத்தி விட்டேன்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நான் இனிமேல் சாராயம் விற்பனை செய்ய மாட்டேன் எனவும், திருந்தி வாழ விரும்புவதாகவும் எழுதி கொடுத்துள்ளேன்.

ஆனால், பெரம்பூர் போலீஸார், சாராயம் விற்பனை செய்யவில்லை என்றாலும் தங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கூறி என் மீதும், எனது பிள்ளைகள் மீதும் பொய் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர்.

சென்னையில் வேலைபார்த்து வந்த எனது மகன் ஊருக்கு வந்தபோது அவர் மீது சாராயம் விற்றதாக பொய் வழக்கு போட்டு எண்ணிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எங்கிருந்தோ சாராய பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து எனது வீட்டு முன்பு போட்டு உடைத்து அதை போலீஸார் வீடியோ எடுத்து செல்கின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து திருந்தி வாழ நினைக்கும் என்னையும், எனது குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

-ராஜ்-

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

புதன் 18 மே 2022